மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவர் காரியாலம் மாவட்ட செயலகத்தில் இன்று நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கடசியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
மாவட்ட ஒருங்கினைப்பு குழுவின் இணைத் தலைவராக சிவநேசதுரை சந்திரகாந்தன் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வரும் சிவநேசதுரை சந்திரகாந்தன் குறித்த மாவட்ட ஒருங்கினைப்பு குழுகூட்டத்தில் பங்கேற்பதற்கா நீதிமன்ற அனுமதியினை கோரியிருந்தார்.
அதற்கான அனுமதி நேற்று நீதிமன்றத்தில் சிறைச்சாலை ஆணையாளர் அனுமதித்தால் பங்கேற்கலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதையடுத்து இன்று மாவட்ட செயலகத்தில் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருக்கான காரியாலம் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டது.
மாவட்ட செயலக ஆலயத்தில் ஆலய பிரதம குரு ஜெகதீஸ்வர குருக்கள் தலைமையில் நடைபெற்ற சமய வழிபாடுகளுடன் காரியாலம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன், மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சனி ஸ்ரீகாந்த், உதவி அரசாங்க அதிபர் எ.நாவேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.