சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் சமுர்த்தி அபிவிருத்தி திட்டத்தின் புதிய பயணப்பாதை எனும் திட்டத்தின் கீழ், அஸ்வெசும நலனுதவி திட்டத்துடன் இணைந்த
வகையில் சமுர்த்தி திட்டத்தினை செயற்படுத்துவது தொடர்பாக, மாவட்ட சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு இன்று மட்டக்களப்பு மண்முனை
வடக்கு டேபா மண்டபத்தில் நடைபெற்றது
மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ். புவனேந்திரன் தலைமையில் இடம்பெற்ற செயலமர்வில், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் 2030 ஆம் ஆண்டாகும் போது வறுமையற்ற
வலுவூட்டப்பட்ட சுபிட்சமிகு இலங்கையினை உருவாக்குவதற்கு செயற்படும் முன்னோடி நிறுவனமாக அமைவதற்கு, நலன் உதவி பெறும் நிலையில் உள்ள சமூகத்தை
தொழில் முயற்சியுள்ள சமூகமாக மாற்ற தயார்படுத்தல் தொடர்பான செயலமர்வாக நடைபெற்றது
செயலமர்வில் சிரேஸ்ட சமுர்த்தி முகாமையாளர் மனோகிதராஜ், மாவட்ட சமுர்த்தி சமூதாய அடிப்படை அமைப்பிற்கு பொறுப்பான முகாமையாளர், சமுர்த்தி வங்கி சங்கங்களின் முகாமையாளர்கள், பிரதேச சமூதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்கள், செயலாளர்கள், மற்றும் சமூதாய அடிப்படை அமைப்புகளுக்கு பொறுப்பான அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.