மட்டக்களப்பு லைட் ஹவுஸ் விளையாட்டு கழகம் லைட் ஹவுஸ் இளைஞர் கழகம் ,கிராம பொது அமைப்புகள், கிராம மக்களுடன் இணைந்து நடாத்திய கலாச்சார விளையாட்டு விழா
இன்று லைட் ஹவுஸ் விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெற்றது.
தமிழ் – சிங்கள சித்திரை புத்தாண்டை மையப்படுத்தியதாக பாரம்பரிய கலாசார கிராமிய விளையாட்டு நிகழ்வுகள்
இடம்பெற்றன.
பாரம்பரிய கலாச்சார கிராமிய விளையாட்டு நிகழ்வில், கலாசார வினோத விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் விளையாட்டு போட்டி நிகழ்வுகளில்
பங்குபற்றி வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசில்களும் வழங்கப்பட்டன .
பாலமீன்மடு பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் இனியன், கொக்குவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.கே.யு.பி.விமலரத்தின ,
மாவட்ட விளையாட்டு துறை உத்தியோத்தர் ஈஸ்வரன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.