மட்டக்களப்பு – வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலத்தில் கற்கும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய 200 மாணவர்களுக்கு
கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
பாடசாலை அதிபர் என். கதிராமத்தம்பி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு நிறுவனத்தின்
நிதியுதவியில் கொள்வனவு செய்யப்பட்ட கற்றல் உபகரணங்கள், மாணவர்களிடம் கையளிக்கப்பட்டன.
இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் தங்கராஜா திலீப்குமார் உட்பட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.
இதேவேளை, கனடா மண்வாசனை அமைப்பின் ஊடாக வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மங்கிக்கட்டு,ஈச்சந்தீவு,நாவற்காடு,மகிழவட்டவான் போன்ற பகுதிகளில்
உள்ள உயர்தரம்,சாதாரண தரம் பயிலும், பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள மாணவிகளுக்கு கற்றல் நடவடிக்கைகளுக்குத் தேவையான
உதவிகள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.