மட்டக்களப்பு வாகரையில், சுவிஸ் உதயம் அமைப்பால், வாழ்வாதார உதவி

0
126

மட்டக்களப்பு வாகரையில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட நிலையில் வாழும் குடும்பமொன்றின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில்,
சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் தையல் இயந்திரமொன்று வழங்கப்பட்டது.
சுவிஸ் நாட்டை சேர்ந்த விஜயகுமார்,சாந்தி தம்பதியினரின் புதல்வர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு இவ் உதவி வழங்கப்பட்டது.
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண கிளை தலைவர் மு.விமலநாதன் தலைமையில், சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின்
பொருளாளர் க.துரைநாயகம்,செயலாளர் அம்பலவாணர் ராஜன் உள்ளிட்டோர் உதவியை வழங்கினர்.