மட்டக்களப்பு வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் மைதானத்தில் நோன்பு பெருநாள் கூட்டு தொழுகை இன்று காலை
பொலிசாரின் விசேட பாதூகாப்பிற்கு மத்தியில் நடைபெற்றது.
வாழைச்சேனை முஹைதின் ஜிம் ஆ பள்ளிவாயல் நிர்வாகத்தின் ஏற்பாட்டில்;, பிரதேசத்தின் 8 பள்ளிவாயல்களின் சம்மேளத்தின் தலைவர்
முகம்மது இப்றாகிம் சீனிமுகமட் தலைமையில் நோன்பு பெருநாள் கூட்டு தொழுகை இடம்பெற்றது.
நிகழ்வில் 8 பள்ளி வாயல்களின் மகல்லா வாசிகள் உட்பட மௌவி பேஸ் இமாம் ஏ.எல்.முசாமில் முகைதீன் கலந்து கொண்டு தொழுகையினை மேற்கொண்டார்.
சமூக ஒற்றுமை, குடும்ப உறவு பேனுதல் சலாத்தை பரப்புதல், சக்காத்து விடயங்களை கணக்கு பார்த்து வழங்குதல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும்
அறிவுரைகள் வழங்கப்பட்டன.
Home கிழக்கு செய்திகள் மட்டக்களப்பு வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில்முஸ்லிம் நோன்பு பெருநாள் கூட்டு தொழுகை