மட்டக்களப்பு மன்முனைப்பற்று ஆரையம்பதி பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் காத்திருந்த மக்கள் அனைவருக்கும் எரிபொருள் விநியோகிக்காத நிலையில் குறித்த பகுதியில் குழப்பநிலைமை ஏற்பட்டது.
மட்டக்களப்பு மன்முனைப்பற்று ஆரையம்பதி பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இன்று காலை பெற்றோலை பெற்றுக் கொள்வதற்காக அரசாங்க உத்தியோகத்தர்களும், பொது மக்களும் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்;.
இதன்போது காலையில் சிலருக்கு பெற்றோல் வழங்கப்பட்டதையடுத்து பெற்றோல் வழங்குவது இடை நிறுத்தப்பட்டது.
இதனால் பொது மக்கள் விசணம் அடைந்து பெற்றோலை வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து இராணுவத்தினரும் பொலிசாரும் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பாதுகாப்புக் கடைமைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
எவ்வாறாயினும், எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக நீண்ட தூரத்துக்கு மோட்டார்சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகளுடன் பொதுமக்கள் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.