மட்டு.ஏறாவூரில் கலைஞர்களுக்கு
மரக்கறிப் பயிர்கள் விநியோகம்

0
370

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள உணவுப் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் வகையில் கலைஞர்களுக்கு மரக்கறிப் பயிர் நாற்றுக்கள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக ஏறாவூர் நகர விவசாய விரிவாக்கல் பிரிவின் போனாசிரியை எம்.எச். முர்ஷிதா ஷிரீன் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர பிரதேசத்திலுள்ள கலையாற்றல் மிக்க பல்துறைக் கலைஞர்களுக்கு கத்தரி மற்றும் மிளகாய் நாற்றுக்களை வழங்கும் நிகழ்வு ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய விவசாயப் போதனாசிரியை உண்மையில் சிறந்த வீட்டுத் தோட்டத்தை அமைக்கக் கூடியவர்கள் கலையுணர்வு கொண்ட கலைஞர்கள் எனக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் ஏறாவூர் நகர உதவிப் பிரதேச செயலாளர், கலாச்சார உத்தியோகத்தர்கள் பயனாளிகள் கலந்து கொண்டனர்.