மட்டு. ஏறாவூரில் ‘முற்றத்து மல்லிகை’ விசேட காப்பகம் திறந்து வைப்பு

0
251

மட்டக்களப்பு ஏறாவூரில் உள்ளூர் எழுத்தாளர்களின் ஆக்கங்களைத் தாங்கிய ‘முற்றத்து மல்லிகை’
விசேட காப்பகம் ஏறாவூர் பொது நூலகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
நூலக பொறுப்பாளர் ஜௌபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக, ஏறாவூர் நகர
சபை செயலாளர் ஹமீம் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
எழுத்தாளர்கள் சார்பாக முன்னாள் அமைச்சர் கவிஞர் பசீர் சேகு தாவூத் சிறப்புரையாற்றியதுடன், நிகழ்வில்
கலந்து கொண்ட எழுத்தாளர்களினால் ‘முற்றத்து மல்லிகை’ விசேட காப்பகத்திற்கான நூல்களும் அன்பளிப்புச்
செய்யப்பட்டன.
தாய் மண் எழுத்தாளர்களினால் வெளியிடப்பட்ட ஆக்கங்கள் தொடர்பான தகவல்களை எதிர்கால
சமூகத்தினருக்கு வழங்கும் வகையிலும், உள்ளூர் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கிலும் ‘முற்றத்து
மல்லிகை’ விசேட காப்பகம் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.