மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும்
தெரிவுசெய்யப்பட்ட ஐம்பது (50) குடும்பங்களுக்கு அவர்களின் குடும்ப நிலைமையை கருத்தில் கொண்டு உதவித்தொகைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான வாமதேவன் தியாகேந்திரன் தனது சொந்த நிதியிலிருந்து இவ் உதவித்தொகையினை இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் இவ்வாறான மக்களுக்கு வழங்கி
வருகின்றார்.
இன ஐக்கியத்திற்கும் சமூக நலனுக்குமான அமைப்பின் தலைவர்
தாவூத் முகம்மது உமர் அறபாத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளர்எம்.எல்.எம்.என். நைறூஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நிதியுதவியினை வழங்கி வைத்தனர்.