மட்டு.ஏறாவூர் நகரசபையின்2023ம் ஆண்டிற்கான பட்ஜெட் நிறைவேறியது

0
158

மட்டக்களப்பு ஏறாவூர் நகர சபையின் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத்திட்டம்; புதிய தவிசாளர் தலைமையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து
ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.
நகர சபையின் புதிய தவிசாளர் எம்எஸ். சுபைர் பாதீட்டினை சமர்பித்த பின்னர், இரண்டு நிமிட இடைவெளியில், சபை உறுப்பினர்கள் வரவு-செலவுத் திட்டத்தை ஏகமானதாக அங்கீகரிப்பதாக
17 உறுப்பினர்களைக்கொண்ட ஏறாவூர் நகர சபையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி , ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் சுயேச்சைக்குழு உறுப்பினருமான எட்டு பிரதிநிதிகள் இன்று
சபைக்கு சமூகமளித்திருந்தனர்.
முஸ்லிம் தேசியக்கூட்டமைப்பு , ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு , ரீ.எம்.வீ.பீ மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் இன்றைய தினம் சபைக்கு சமூகமளிக்கவில்லை.