மட்டு. ஏறாவூர் மாக்கான் மாக்கார் பாடசாலையின் அதிபரின் இடமாற்றத்தை நிறுத்தக்கோரி மாணவர்கள் போராட்டம்

0
157

மட்டக்களப்பு ஏறாவூர் மாக்கான் மாக்கார் பாடசாலையின் அதிபர் இடமாற்றத்தை நிறுத்தக்கோரி மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் வலய கல்வி அதிகாரிகள் வழங்கிய உறுதிமொழியை அடுத்து முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான மாணவர்கள் பெற்றோர் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

ஆசிரியர்கள் பணியாளர்கள் ஆகியோரை பாடசாலையினுள் நுளைய அனுமதிக்காத மாணவர்கள் தமது கோரிக்கைக்கான தீர்வை பெற்றுதரக்கோரி போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு மத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஜே.எப் றிப்கா மற்றும் பொலிஸார் மாணவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டனர்.
இதன்போது இதற்கான தீர்வை விரைவில் பெற்றுத்தருவதாக பிரதிக்கல்விப்பணிப்பாளர் வழங்கிய உறுதிமொழியை அடுத்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.