26 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டு.ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில்
இரத்ததான முகாம் ஏற்பாடு

மட்டக்களப்பு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜாவின் தலைமையில் பிரதேச செயலக இளைஞர் சேவை உத்தியோகத்தர் எஸ்.ஐ.எம்.பஸீலின் ஒருங்கமைப்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது.குறித்த இரத்த தான முகாமில் செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச இளைஞர் கழக சம்மேளன பிரதிநிதிகள் பொது மக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவு வைத்தியர் ஜி.சுகன்யா தலைமையில் இரத்த வங்கி பிரிவு உத்தியோகத்தர்கள் இரத்ததானத்தில் கலந்து கொண்டு குருதிகளை பெற்றுக் கொண்டனர்.
இரத்தானம் வழங்கிய அனைவருக்கும் ஓட்டமாவடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினால் நினைவு சின்னம் வழங்கப்பட்டதுடன் சம்மேளத்தின் அங்கத்தவர்களுக்கான மேலங்கியும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
நாட்டின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் ஓட்டமாவடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் இந்த இரத்ததான முகாமை ஏற்பாடு செய்ததாக இளைஞர் சேவை உத்தியோகத்தர் எஸ்.ஐ.எம்.பஸீல் தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles