மட்டு. கரடியனாறில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவருக்கு உதவி

0
239

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட கரடியனாறு பகுதியில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு நடமாடமுடியாத குடும்பஸ்த்தர் ஒருவரை பராமரிக்கும் வகையிலான தனி அறையொன்று அமைக்கப்பட்டு உரியவர்களிடம் கையளிக்கப்பட்டது.

ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையிடம் குடும்ப உறவினர்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் ஜேர்மனியில் இங்கும் நம்பிக்கை ஒளி அமைப்பின் உதவியுடன் ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை குறித்த தங்குமிடத்தை அமைத்துள்ளது.

இதனை உரியவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சி.சர்வானந்தன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் செயலாளர் பற்குணம், கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கடந்த நான்கரை வருடமாக முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு நடக்கமுடியாத நிலையில் அரை வீட்டில் தனியாக வைத்து பராமரிக்கமுடியாத நிலையில் பெரும் கஸ்டங்களை குடும்பத்தினர் எதிர்நோக்கிவருவதாக தெரிவித்துள்ளனர்.