மட்டு. கல்குடாவில் ஐக்கிய தேசியக்கட்சி அலுவலகம் திறந்து வைப்பு

0
154

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச அலுவலகம் மட்டக்களப்பு கல்குடா தொகுதியின் ஓட்டமாவடியில் திறந்து வைக்கப்பட்டது.
பிரதேச செயற்பாட்டாளர் கலாநிதி முகமட் முஸம்மில் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் றங்கே பண்டார கலந்து கொண்டார்.
அண்மையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக பல்வேறு கட்சிகளில் வேட்புமனுத்தாக்கல் செய்த பலர் நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.