29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டு.கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார்
ஆலய 106ஆவதுஆண்டு திருவிழா திருப்பலி

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் பாதுகாவலராம் புனித இஞ்ஞாசியார் மனமாற்றம் பெற்று 500 ஆண்டுகள் நிறைவு விழாவினை சிறப்பிக்கும் விசேட திருப்பலியும் மட்டக்களப்பு கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தின் 106 ஆண்டு திருவிழா திருப்பலியும் இன்று ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் 106 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலயமான மட்டக்களப்பு கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய வருடாந்த திருவிழா கடந்த 22 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆலய திருவிழா இன்று காலை மட்டக்களப்பு இயேசுசபை மேலாளர் அருட்தந்தை டி.சகாயநாதன் எஸ். ஜெ.அடிகளாரின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்ட கூட்டுத்திருப்பலியுடன் திருவிழா நிறைவுபெற்றது.

ஆலய திருவிழா நவநாள் காலங்களில விசேடதிருப்பலிகளஇடம்பெற்று நேற்று மாலைமாலை புனிதரின் திருச்சொரூபபவனியும் தொடர்ந்து இடம்பெற்ற விசேட நற்கருணை வழிபாட்டுடன் இன்று இடம்பெற்றகூட்டுத்திருப்பலியுடன் கொடியிறக்கப்பட்டு திருவிழா நிறைவுபெற்றது .

இன்றைய தினம் திருவிழா திருப்பலியினை ஒப்புக்கொடுத்த மட்டக்களப்பு இயேசு சபைமேலாளர் அருட்தந்தை டி.சகாயநாதன் எஸ்.ஜெ .அடிகளார் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இதேவேளை கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தில் சிறப்பானஆன்மீகபணிகளை முன்னெடுத்துவரும் பங்குதந்தை அருட்பணி லோரன்ஸ்லோகநாதன் கௌரவிக்கப்பட்டதுடன் ஆலயதிருவிழாகாலங்களில் நடாத்தப்பட்ட வினாவிடை போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களும் நினைவுபரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles