மட்டு.களுதாவளையில் ஸ்ரீ சபாரத்தினம் பயணிகள் நிழற்குடை திறப்பு

0
122

மட்டக்களப்பு களுதாவளையில் தமிழ் ஈழ விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளையின் நிதியுதவியின் ஸ்ரீ சபாரத்தினம் ஞாபகார்த்த பயணிகள் நிழற்குடை களுதாவளை திறந்துவைக்கப்பட்டது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுதாவளை தேசிய பாடசாலைக்கு முன்னால் பயணிகள் நிழற்குடையானது தமிழ ஈழவிடுதலைக் கழகத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்விற்கு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் யோகநாதன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பயணிகள் நிழற்குடை தமிழ் ஈழ விடுதலைக் கழகத்தின் சுவிஸ் நாட்டு கிளையின் நிதி உதவி வழங்கியமை குறிப்பிடத்தக்க விடயம்.