மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் மண்முனை தென்எருவில் பற்று பிரதேசசெயலகத்தின் இளைஞர் சேவைப்பிரிவினால், பால்நிலை அடிப்படையிலான வன்முறையை இல்லாதொழிப்போம் எனும் தொனிப்பொருளில்
விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடாத்தப்பட்டது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய சம்மேளனத்தின் வழிகாட்டுதலில் இடம்பெற்ற கருத்தரங்களில் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் பங்குபற்றினர்.
அடக்குமுறை, சமத்துவம், வன்முறைகள், பால் நிலை அடிப்படையிலான பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் தொடர்பில்
விளக்கமளிக்கப்பட்டது.
பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் சபியதாஸ், இளைஞர் சம்மேளனத்தின் மாவட்ட பயிற்றுவிப்பாளர்களும் கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.