மட்டு.களுவாஞ்சிகுடி பிரதேசத்தில்
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள்

0
121

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பிரதேச வைத்தியசாலை ஊடாக வறிய குடும்பங்களுக்கு பல்வேறு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
உலக தரிசனம் அமைப்பினால் வழங்கப்பட்ட பொருட்களே தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்னம் ஆலோசனையின் கீழ் பெரியகல்லாறு பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஞானராஜா சன்ஜய் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கு.சுகுணன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இவற்றினை வழங்கிவைத்தார்.


பெரியகல்லாறு பிரதேச வைத்தியசாலைக்குட்பட்ட பெரியகல்லாறு,கோட்டைக்கல்லாறு,ஓந்தாச்சிமடம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 48குடும்பங்களுக்கும் மெதடிஸ்த சிறுவர் இல்ல மாணவர்களுக்கும் இந்த பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.