மட்டக்களப்பு காத்தான்குடியில் காத்தான்குடி இமாசா குழுமம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இரண்டாம் கட்டமாக சிலருக்கு காது கேட்கும் கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இமாசா குழுமம் நிறுவனத்தின் அலுவலகத்தில் வைத்து நேற்று காது கேட்கும் கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இமாசா குழுமம் நிறுவனத்தின் தவிசாளர் எம்.அஜ்வத் தலைமையில் இமாசா நிறுவன ஊழியர்களினால் காத்தான்குடி ஏறாவூர் மற்றும் ஆரையம்பதியைச் சேர்ந்தவர்களுக்கு இந்தக் கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன.