மட்டக்களப்பு காத்தான்;குடியில் சமையல் எரிவாயுவை பெறுவதற்காக பொது மக்கள் நீண்ட வரிசையில் இன்று காத்திருந்தனர்.
காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதனாத்தில் வைத்து சுமார் 500 பேருக்கு லீற்றோ சமையல் எரிவாயு வழங்கப்பட்டது.இதனைப் பெறுவதற்காக அதிகமான பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயன சிறீ தலைமையில் சென்ற பொலிசார் பொது மக்களை ஒழுங்கு படுத்தி சமையல் எரிவாயுவை விநியோகிக்க நடவடிக்கை எடுத்ததுடன் பொலிஸ் பாதுகாப்புடன் சமையல் எரிவாயு விநியோகம் இடம் பெற்றது.
மாவட்டத்திலுள்ள பல பிரதேசங்களில் இருந்தும் பொது மக்கள் இங்கு வருகை தந்து வரிசையில் நின்று சமையல் எரவாயுவை பெற்றுச் சென்றனர்.