காரிகை கலை இலக்கிய கழகம் நடாத்திய இஸ்லாமிய முஹர்ரம் 1444 புதுவருட கலைப்பெருவிழா மட்டக்களப்பு காத்தான்குடியில் நடைபெற்றது.
இறைவசனங்கள் ஓதப்பட்டு ஆரம்பமான 1444 புதுவருட கலைப்பெருவிழாவில் தமிழ் மற்றும் ஆங்கில மொழியிலான பேச்சு, இஸ்லாமிய கீதம், கஸீதா, கவிதை என்பன இடம்பெற்றதுடன் காரிகை கலை இலக்கியக் கழக அங்கத்தவர்களால் இஸ்லாமிய கீதம், நாட்டார் பாடல், கோலாட்டம் என்பன அரங்கேற்றப்பட்டன .
தொடர்ந்து காத்தான்குடி பிரதேச பாடசாலைகளில் கடமையாற்றும் ஆறு பெண் அதிபர்கள் மற்றும் காத்தான்குடியில் கலை இலக்கியத் துறைக்கு ஆற்றிய பங்களிப்பினை பாராட்டி 12 பெண் கலைஞர்கள் ‘கலைக்காரிகை’ பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் சமுகமளித்த அதிதிகள் ‘கலைத் தீபம்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
முப்லிஹா பிர்தவ்ஸ் மற்றும் ஜூஸ்லா றமீஸ் ஆகியோரின் நெறியாள்கையில் காரிகை கலை இலக்கிய கழகத்தின் ஸ்தாப தலைவி இலக்கிய சுடர் ஜாஹிதா ஜலால்தீன் தலைமையில் காத்தான்குடி பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அதிதிகளாக கிழக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாண பணிப்பாளர் சரண்யா சுதர்சன் ,காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ உதயஸ்ரீதர் ,உதவி பிரதேச செயலாளர் கேம்ஸ் சில்மியா ,,சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் டி குணபாலா ,கலாச்சார உத்தியோகத்தர் மலர்செல்வன் , மற்றும் சிரேஸ்ட இலக்கிய வாதிகளான கவிமணி புகாரி பலாஹி, மௌலவி பௌஸ் சர்கி மற்றும் மௌலவி மன்சூர் ,கலைஞர்கள் இலக்கிய ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்