மட்டக்களப்பு காத்தான்குடியில் அல்குர்ஆன் மனனப் போட்டியில் பங்கு பற்றியவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு நேற்று காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடைபெற்றது
புத்த சாசன மத மற்றும் கலாசார அலுவலர்கள் அமைச்சின் காத்தான்குடி பிரதேச கலாசார மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் இந்த வைபவம் நடைபெற்றது
இதில் காத்தாங்குடி கலாசார மத்திய நிலையத்தினால் நடத்தப்பட்ட அல்குர்ஆன் மனனப் போட்டியில் பங்கு பற்றி வெற்றியீட்டிய மாணவ மாணவிகள் மற்றும் குர்ஆன் மனனப் பிரிவை நடாத்தும் மதரஸாக்களின் அதிபர்களுக்கும் சான்றிதழ்கள் பரிசீல்கள் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன
காத்தான்குடி பிரதேச செயலாளர் யு. உதய சிறீதர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மருதமுனை தாருல் குதா பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபர் கலாநிதி மௌலவி எம்.எல்.முபாரக் மதனி பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் உலமாக்கள் முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.