மட்டு. காத்தான்குடியில் வீட்டுத் தோட்ட விதைகள் வழங்கப்பட்டன

0
107

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் பிரதேச செயலாளர் உதயசிரிதரின் வழிகாட்டலில்,வீட்டுத் தோட்ட பயனாளிகளுக்கு வீட்டுத் தோட்ட விதைகள் வழங்;கப்பட்டன.
300 வீட்டு தோட்டங்களை உருவாக்கும் திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் செயற்படும்99 சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளின் நிதி பங்களிப்புடன், முதற்கட்டமாக ஆறு வகையான வீட்டுத்
தோட்ட விதைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
காத்தான்குடி பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஜாயிதா ஜலால்தீனால் வீட்டுத் தோட்ட விதைகள்
பயனாளிகளுக்கு வழங்கப்பட்டதுடன்,காத்தான்குடி விவசாய போதனாசிரியை முபீதாவினால் கருத்துரைகளும்
வழங்கப்பட்டன.
நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி திட்ட முகாமையாளர் சுபந்தினி கண்ணன,; சமுர்த்தி திட்ட
உதவியாளர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் இப்ராஹிம், சமுர்த்தி உத்தியோகத்தர்கள,; பயனாளிகள்
கலந்து கொண்டனர்.