மட்டு.காத்தான்குடி கடற்கரை பகுதியில் சிரமதானப் பணி

0
196

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கடற்கரை பகுதியில் சிரமதான பணி இன்று மேற்கொள்ளப்பட்டது

சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு கரையோரம் பேணல்திணைக்களம் ,காத்தான்குடி பிரதேச செயலகம்,காத்தான்குடி நகர சபை இணைந்து சிரமதான பணியினை முன்னெடுத்தன.

இதன போது காத்தான்குடி கடற்கரை பிரதேசத்திலுள்ள கரையோரப் பகுதி சிரமதானத்தின் மூலம் துப்புரவு செய்யப்பட்டது

சிரமதான நிகழ்வை காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய சிறீதரன் ஆரம்பித்து வைத்ததுடன் இந்த சிரமதானத்தில் கரையோரம் பேணல் திணைக்களத்தின் காத்தான்குடி பிரதேசத்திற்கான உத்தியோகத்தர் மலர் விழி காத்தான்குடி பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் எம். எம் ஜரூப் உட்பட கிராம உத்தியோகத்தர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள். சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் உறுப்பினர்கள் மீனவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்