மட்டு.காத்தான்குடி கடற்கரை
பகுதியில் சிரமதானப்பணிகள்

0
163

மட்டக்களப்பு குருக்கள் மடம் இராணுவ முகாம் ஏற்பாட்டில் இன்று காத்தான்குடி கடற்கரையை சுத்தப்படுத்தும் சிரமதானப் பணிகள் முன்னேடுக்கப்பட்டது.மட்டக்களப்பு-குருக்கள்மடம் இராணுவ முகாம் கட்டலை தளபதி மேஜர் அசேல யாப்பா தலைமையில் இடம்பெற்ற சிரமதான நிகழ்வில் இராணுவ வீரர்கள் மற்றும் காத்தான்குடி நகர சபை ஊழியர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கடற்கரை மணல்களில் காணப்பட்ட உக்காத கழிவுகள் பல பைகளில் சேகரிக்கப்பட்டதுடன் காத்தான்குடி நகர சபை சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் வாகனங்களில் ஏற்றப்பட்டது.