மட்டு.காத்தான்குடி பிரதேச செயலகத்தில் சர்வதேச மகளிர் தின வைபவம்

0
177

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச செயலகம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மகளிர் தின வைபவம் நடைபெற்றது.

இதன் போது பெண் எழுத்தாளர்கள், கலைஞர்களின் கலந்துரையாடல் இடம் பெற்றதுடன் காத்தான்குடி இஸ்லாமிய இலக்கிய கழகத்தைச் சேர்ந்த பிரபல பெண் எழுதாளர் காத்தான்குடி பாத்திமா தலைமையில் பெண்கள் கலந்து கொண்ட கவியரங்கொன்று இடம் பெற்றதுடன் கலை நிகழ்வுகளும் நடைபெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய சிறீதர், உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா, கணக்காளர் செல்வி ஏ.சித்திரா, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் p பத்மா ஜெயராஜ், நிருவாக உத்தியோகத்தர் p ஜாயிதா ஜலால்தீன், ஐவெயார் நிறுவனத்தின் தலைஅனீசா பிர்தௌஸ் உட்பட பெண் கலைஞர்கள், பெண் சமூக செயற்பாட்டாளர்கள், கலை இலக்கியவாதிகள் சமூக ஆர்வலர்கள், காத்தான்குடி பிரதேச செயலக பெண் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.