மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் 2021 கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையில் வர்த்தகப் பிரிவு மற்றும் கலைப்பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற இரண்டு மாணவிகள் மற்றும் அப்பாடசாலையிலிருந்து பல்கலைக் கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிகள் இன்று கௌரவிக்கப்பட்டனர்.2021 கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் இப்பாடசாலை மாணவி எம்.ஆர்.பாத்திமா பஸ்னா, கலைப்பிரிவில் எஸ்.பாத்திமா ஸம்லா ஆகிய இரண்டு மாணவிகளும் மாட்ட மட்டத்தில் முதலாமிடத்தினை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.
குறித்த பாடசாலையிலிருந்து மருத்துவ பீடத்திற்கு 5 மாணவிகளும் உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் 12 மாணவிகளும் பௌதீக விஞ்ஞானப்பிரிவில் 3 மாணவிகளும், வர்த்தகப் பிரிவில் 23 மாணவிகளும் கலைப் பிரிவில் 18 மாணவிகளுமாக மொத்தம் 61 மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பாடசாலை அதிபர் அஸ்செய்ஹ் யு.எல்..மன்சூர் தலைமையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எஸ்.உமர்மௌலானா காத்;தான்குடி கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.எம்.கலாவுதீன் உட்பட பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் விசேடமாக மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவிகளை மாலை அணிவித்து கௌரவித்தனர்.