மட்டு.காத்தான்குடி வர்த்தகர்களுக்கிடையில் கலந்துரையாடல் முன்னெடுப்பு

0
145

மட்டக்களப்பு காத்தான்குடியிலுள்ள ஹோட்டல்கள் உணவகங்கள், சிற்றுண்டிச் சாலைகளின் உரிமையாளர்களுக்கும் காத்தான்குடி வர்த்தக சங்கத்துக்குமிடையிலான சந்திப்பொன்று காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனக் கட்டிடத்தில் நடைபெற்றது.

இதில் காத்தான்குடி வர்த்தக சங்கத்தின் தலைவர் கே.எல்.எம்.பரீட், செயலாளர் முகம்மட் ஆரிப், பொருளாளார் மக்பூல் உட்பட அதன் உப தலைவர்கள் பிரதி நிதிகள் மற்றும் ஹோட்டல்கள் உணவகங்கள், சிற்றுண்டிச் சாலைகளின் உரிமையாளர்கள் மற்றும் லீற்றோ சமையல் எரிவாயு மட்டக்களப்பு மாவட்ட ஏக விநியோகஸ்தர்களான எஸ்.எஸ்.எம்.சொல்கார் நிறுவனத்தின் பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.

நேற்றிரவு இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டினால் ஹோட்டல்கள் உணவகங்கள், சிற்றுண்டிச் சாலைகளின் உரிமையாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் சில உணவகங்கள் மூடப்பட்டுள்ளமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

இதன் போது காத்தான்குடி வர்த்தக சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள காத்தான்குடியிலுள்ள ஹோட்டல்கள் உணவகங்கள், சிற்றுண்டிச் சாலைகளுக்கு காத்தான்குடி வர்த்தக சங்கத்தினூடாக சமையல் எரிவாயுவை பெற்றுக் கொடுக்க லீற்றோ சமையல் எரிவாயு மட்டக்களப்பு மாவட்ட ஏக விநியோகஸ்தர்களான எஸ்.எஸ்.எம்.சொல்கார் நிறுவனத்தினூடாக நடவடிக்கை எடுப்பதெனவும் அதற்காக காத்தான்குடியிலுள்ள ஹோட்டல்கள் உணவகங்கள், சிற்றுண்டிச் சாலைகளை காத்தான்குடி வர்த்தக சங்கத்தில் பதிவு செய்து கொள்ளுமாறும் இதன் போது கோரப்பட்டது.

https://youtu.be/BxBBM5cB7D0