மட்டு.கொக்கட்டிச்சோலை, சாந்திமலை பகுதியில் ஒருவர் கைது

0
166

மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திமலை பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இதன்போது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 20,000 மில்லி லீட்டர் கசிப்பு அடங்கிய போத்தல்களை நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரினால் தோண்டப்பட்டு கசிப்பு போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.