மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட 4 ஆம் வட்டாரம் சின்ன ஊறணி கொக்குவில் பிரதான எல்லை வீதியினை செப்பனிடுவதற்கான ஆரம்ப பணிகளை மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அமிர்தகழி கிராம மக்கள், பாடசாலை மாணவர்கள் அதிகளவில் பயன்படுத்தப்படும் இவ் வீதியானது மழை காலங்களில் பயணிக்க செய்ய முடியாத நிலையில் இவ் வீதியினை புனரமைப்பு செய்து தருமாறு மாநகர சபையின் 4 ஆம் வட்டாரம் உறுப்பினரும் ,பிரதி முதல்வருமான கந்தசாமி சாத்தியசீலனிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதற்கிணங்க மாநகர சபையின் 2022 ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட பாதீட்டு நிதியில் இருந்து சுமார் 2.5 மில்லியன் ரூபாய் செலவில் சின்ன ஊறணி கொக்குவில் பிரதான எல்லை வீதியினை செப்பனிடும் பணிகள் மாநகர முதல்வர் உட்பட மாநகர சபை உறுப்பினர்களினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
4 ஆம் வட்டாரம் உறுப்பினரும் ,பிரதி முதல்வருமான கந்தசாமி சாத்தியசீலெனினால் முன்மொழியப்பட்ட கிராமத்திற்கான அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மாநகர சபையினால் 2022 ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட பாதீட்டு நிதியில் இருந்து முதல்வர் தலைமையில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வ்ருகின்றமை குறிப்பிடத்தக்கது .