கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் இன்று காலை மாசிமக தீர்த்தோற்சவம் நடைபெற்றது.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ராஜ் நிஜோத் குருக்களின் தலைமையில் நடைபெற்றதுடன் விநாயகர் வழிபாடுகளுடன் கிரியைகள் ஆரம்பமாகி விசேட யாக பூசைகளுடன், ஹோமம் பூசைகள் நடைபெற்றன.
விசேட அபிஷேக பூஜைகளுடன் பிரதான கும்பங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அம்மனுக்கு முன்பாகவே விசேட பூஜை நடத்தப்பட்டதுடன் அம்பாள் ஊர்வலமாக ஆலயத்தின் முன்பாகவுள்ள தீர்த்தக்கேணிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அம்பாளுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் தீர்த்தக்கேணியில் விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்றதை தொடர்ந்து மாசிமகம் தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.