மட்டு.சத்துருக்கொண்டான் முதலாம் குறுக்கு வீதிகளுக்கான தார் இடும் பணிகள்

0
179

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் முதலாம் குறுக்கு வீதிகள் புனரமைக்கப்பட்டு வீதிகளுக்கான தார் இடும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் 176 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட முதலாம் குறுக்கு வீதிப்பகுதியில் வசிக்கும் மக்கள், பாடசாலை மாணவர்கள் மழை காலங்களில் பயணிக்க செய்ய முடியாத நிலையில் உள்ள இவ் வீதியினை புனரமைப்பு செய்து தருமாறு மாநகர சபையின் முதலாம் வட்டார உறுப்பினர் விஜயதேவா சசிகலாவிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க மாநகர சபையின் 2020ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட பாதீட்டு நிதியின் மூலம் வீதி செப்பனிடப்பட்டு வீதிக்கான தார் இடும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.