மட்டு.திருப்பழுகாமம் திரௌபதி
அம்மன் ஆலய உற்சவம்

0
327

மட்டக்களப்பு மாவட்டம் திருப்பழுகாமம் திரௌபதி அம்மன் ஆலய வருடாந்த தீப்பள்ளய சடங்கு வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்றது.500வருடங்களுக்கு மேல் பழமையானதும் கிழக்கிலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றானதுமான மட்டக்களப்பு மாவட்டம் திருப்பழுகாமம் திரௌபதி அம்மன் ஆலய வருடாந்த திருக்கதவு கதவு திறக்கும் நிகழ்வானது கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.

இவ் ஆலயத்தின் உற்சவமானது படுவான்கரை பிரதேசத்தில் மிகவும் பழமையான அம்மன் ஆலய உற்சவமாக கருதப்படுகின்றது.
திருப்பழுகாமம் கேணிக்கரை பிள்ளையார் ஆலயத்தில் தீக்கட்டை எடுத்துவரப்பட்டு பழுகாமம் திரௌபதி அம்மன் ஆலய முன்றலில் தீமூட்டும் நிகழ்வானது நடைபெற்றதுடன் தேவாதிகள் மற்றும் பஞ்சபாண்டவர்கள் சகிகதம் தீமிதிப்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.