மட்டக்களப்பு திருப்பழுகாமம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு ஆலய மகோற்சவப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
சிவாச்சாரியார் சிவசிறி தெ.கு.ஜனேந்திரராஜா குருக்கள் தலைமையில் கொடியேற்றத்துடன் மஹோற்சவம் ஆரம்பமாகியது.
இன்று காலை விசேட வழிபாடுகளுடன் கிரியைகள் ஆரம்பமாகி,யாகபூஜை,மூலமூர்த்திக்கு அபிசேக ஆராதனை நடைபெற்று வசந்த மண்டபபூஜை நடைபெற்றதுடன் கொடிச்சீலை ஊர்வலமாக கொடித்தம்பத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.
இதன்போது கொடித்தம்பத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன்
பூஜைகளை தொடர்ந்து கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.
தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா இடம்பெற்று எதிர்வரும் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தீர்த்தோற்சவம் இடம்பெறும் என்பதுடன்
இரவு 7 மணிக்கு கொடியிறக்கம் இடம்பெறும்.
200வருடத்திற்கு மேல் பழமையான இந்த ஆலயம் தமிழர்களின் பாரம்பரியங்களைக்கொண்டதாக உற்சவம் நடைபெறுகின்றது.