கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஜூன் 8 ஆம் திகதி முதல் மேலும் 12 மாவட்டங்களில் முன்னெடிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் மாத்தளை, நுவரெலியா, கேகாலை, திருகோணமலை, ஹம்பாந்தோட்ட, பதுளை, அநுராதபுர, புத்தளம், அம்பாறை, மட்டக்களப்பு, மொனராகல மற்றும் பொலன்னறுவ ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணி பெண்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் அரச ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.