மட்டக்களப்பு நகரில் சுற்றுலா பயணிகளை அதிகளவு கவரும் பாலமீன்மடு வெளிச்சவீட்டை புனரமைப்பதற்கான பணியை ஆரம்பிக்கவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் துரைசிங்கம் மதன் வேண்டுகோள் விடுத்தார்.
மட்டக்களப்பு மாநகரசபையின் 57வது அமர்வு மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது மாநகரசபையின் சம்பிரதாயங்களுடன் மாநகரசபையின் அமர்வு ஆரம்பமான நிலையில் மாநகர முதல்வரின் தலைமையுரை இடம்பெற்றது.
மாநகரசபையின் அமர்வு ஆரம்பமான நிலையில் மாநகரசபை முதல்வரினால் முன்மொழிவுகள் வாசிக்கப்பட்டு சபையின் அனுமதிகள் வழங்கப்பட்டன.
இதேபோன்று மாநகரசபையினால் பாலமீன்மடு வெளிச்சவீட்டை புனரமைப்பதற்கான பணியை கடந்த காலத்தில் முன்னெடுத்தபோதும் கடந்த காலத்தில் நிர்வாக சீர்கேடினால் குறித்த வெளிச்சவீட்டை புனரமைக்கப்படாத நிலையிலேயே இருந்துவருவதாக இங்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் துரைசிங்கம் மதன் தெரிவித்தார்.
குறித்த வெளிச்சவீடு மற்றும் அதற்கு அருகில் உள்ள கோரி என்பன சுற்றுலாப்பயணிகளை கவருமிடமாக இருப்பதன் காரணமாக அதனை புனரமைக்கவேண்டிய தேவையுள்ளதாக இதன்போது தெரிவித்தார்.