மட்டக்களப்பு நகர் ரோட்டரிக் கழகத்தின் 2022 – 2023 ஆண்டுக்கான சேவை பணியேற்பு விழாவும் புதிய தலைவருக்கான பதவி ஏற்கும் நிகழ்வும் ரோட்டரிக் கழகத்தின் தலைவர் வைத்தியர் இ ,சிறீநாத் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு நகர் ரோட்டரிக் கழகத்தின் உறுப்பினர்களினால் அதிதிகள் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் ரோட்டரிக் கழகத்தின் புதிய அங்கத்தவர்கள் அறிமுக நிகழ்வுகளும் ரோட்டரிக் கழகத்தின் அங்கத்தவர்களை கௌரவித்து நினைவு சின்னம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
தொடர்ந்து ரோட்டரிக் கழகத்தின் 2022 – 2023 ஆண்டுக்கான புதிய தலைவர் தெரிவு இடம்பெற்றதுடன் புதிய தலைவராக வைத்தியர் இ ,சிறீநாத் தெரிவு செய்யப்பட்டார்.
நிகழ்வில் அதிதிகளாக பிடிஜி . பி .டி.ஆர் . ராஜன் கலந்துகொண்டதுடன் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர்
கே .கருணாகரனை. மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் , மாநகர ஆணையாளர் என் , மதிவண்ணன் ,ரோட்டரிக் கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் , பெண் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்
மட்டக்களப்பு நகர் ரோட்டரிக் கழகத்தின் 2022 – 2023 ஆண்டுக்கான சேவை பணியேற்பு விழாவில் மட்டக்களப்பு
ஏறாவூர் சவுக்கடி சிவபுரம் சிவசக்தி வாசகசாலைக்கு புத்தகங்களும் , கித்துள் ஸ்ரீ கிருஸ்ணா வித்தியாலய மாணவர்களுக்கான காயத்தால் உபகரணங்களும் , வந்தாறுமூலை பிரதேசத்தை சேர்ந்த விசேட தேவையுடையவருக்கான சக்கர நாற்காலியும் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டதுடன் , தேசிய ரீதியிலும் ,மாவட்ட ரீதியிலும் சிறந்த பெறுபேறுகளை பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது .