மட்டு.நாவற்குடா தர்மரெட்ணம் வித்தியாலயத்திற்கு கணணி கையளிப்பு

0
256

மட்டக்களப்பு நாவற்குடா தர்மரெட்ணம் வித்தியாலய மாணவர்களுக்கான கணணி கற்றல் செயல்பாட்டுக்கான வகுப்பறை இன்று ஆரம்பித்து
வைக்கப்பட்டது.
நாவற்குடா தர்மரெட்ணம் வித்தியாலய அதிபரினால் சமாரியனின் கரங்கள் அமைப்பிற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க பாடசாலைக்காக சுமார் 4 இலட்சம் பெறுமதியான கணணிகள் கையளிக்கப்பட்டன.
பாடசாலை மாணவர்களின் கணணி தொழில்நுட்ப கற்றல் செயல்பாடுக்கான பிரிவு பாடசாலை அதிபர் பிரபாகரி ராஜகோபாலசிங்கம் தலைமையில் இன்று ஆரம்பித்து
வைக்கப்பட்டது.
ஐ ட்றேன் அவுஸ்ரேலியா அமைப்பின் இனைப்பாளர் ரட்ன காந்தன், சமாரியனின் கரங்கள் அமைப்பின் இலங்கை நாட்டுக்கான பணிப்பாளரும் ஐ ட்றேன் அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளருமான டி.ஹரிசங்கர் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு கணினி கற்றல் பிரிவை ஆரம்பித்து வைத்தனர்.
நிகழ்வில் சமாரியன் கரங்கள் கிழக்கு மாகாண இணைப்பாளர் வி.பிரதீப், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ஹமிலா, பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.