மட்டு.பாவற்கொடி கிராம சேவையாளர் பிரிவில் குடிநீர் விநியோக திட்டம் ஆரம்பம்

0
141

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பாவற்கொடி கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட மக்களின் குடிநீர் தேவையினை பூர்த்திசெய்யும் வகையிலான குடிநீர் விநியோக திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊடாக இந்த குடிநீர் விநியோக திட்டம் சுமார் 25மில்லியன் ரூபா நிதியொக்கீட்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திட்டத்தினை ஆரம்பித்துவைத்தார்.