மட்டு. பிரதேச செயலக்ததில் இடம்பெற்ற கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

0
178

தமக்கான உள்ளீடுகளை உரிய திணைக்களங்களுக்கு வழங்கும் வரைக்கும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதில்லையென மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.

சிறுபோக விவசாய நடவடிக்கையின்போது விவசாயிகளுக்கான உள்ளீடுகளை உரிய காலத்தில் வழங்குவதற்கு அரசாங்கம் மிகவும் கரிசனையாகவுள்ளதாகவும் சேதனப்பசனை மூலம் வெற்றிகரமான விவசாய நடவடிக்கையினை முன்னெடுக்கமுடியும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்தார்.

எனினும் தமக்கான உள்ளீடுகளை உரிய திணைக்களங்களுக்கு வழங்கும் வரைக்கும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதில்லையென மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.

இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விவசாய ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் அக்கூட்டத்தினை புறக்கணித்து வெளிநடப்புசெய்தனர்.