மட்டு.புதிய காத்தான்குடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் காயம்

0
290

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் திங்கட்கிழமை(01) நள்ளிரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூன்று பேர் படு காயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்

புதிய காத்தான்குடி மெயின் வீதியில் இருந்து பதுறியா வீதி வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் புதிய பாலமுனை வீதி வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதுண்டதிலேயே இந்த விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது.

படுகாயமடைந்த மூவரில் இருவர் மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையிலும் ஒருவர் காத்தான்குடி ஆதாரவைத்திய சாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்