மட்டக்களப்பு காத்தான்குடி பொலீஸ் பிரிவிலுள்ள புதிய காத்தாங்குடி நெசவுநிலைய வீதியில் நேற்று மாலை வீடொன்று உடைக்கப்பட்டு திருடப்பட்ட நகைகள் மற்றும் பணம் என்பவற்றை காத்தான்குடி பொலீசார் மீட்டுள்ளதுடன் சந்தேகநபரையும் கைது செய்துள்ளனர்.சந்தேகநபர் திருடிய தங்க நகைகள் மற்றும் பணம் என்பவற்றை விற்க முயன்றபோது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து ஒன்னரை பவுன் தங்க நகைகளையும் 3500 பணம் மற்றும் அவரிடமிருந்து 80 மில்லி கிராம் ஐஸ் போதை பொருளையும் கைப்பற்றியுள்ளனர்பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயன சிறியின் ஆலோசனையில் குற்ற தடுப்பு பொறுப்பு அதிகாரி ரஹீம் தலைமையில் ஜெயசிங்க, சாணக்க எஸ் தனோஜன் கருணாரெட்ன ஆகியோர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் நகைகளையும் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் போதை பொருட்களையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக. காத்தான்குடி பொலீசார் தெரிவித்தனர்