மட்டக்களப்பு மாவட்டத்தில் இயேசு கிறிஸ்து பிறப்பின் பிரதான, நத்தார் நள்ளிரவு திருப்பலி வழிபாடு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில், மட்டக்களப்பு-அம்பாறை மறைமாவட்டங்களின் ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்;டகை தலைமையில் இடம்பெற்றது. பாலன் குடில் ஒளியேற்றப்பட்டு, கூட்டுத் திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது. 2005ம் ஆண்டு நத்தார் நள்ளிரவு திருப்பலியில் கலந்துகொண்டிருந்தபோது, ஆயுததாரிகளால் சுட்டுப்படுகொலை செய்ய தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் ஆத்மசாந்தி ஆராதனையும் இடம்பெற்றது.