மட்டு.பெரியகல்லாறு சிவசுப்ரமணியர் ஆலய வருடாந்த மஹோற்சவம்

0
201

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்;டக்களப்பு பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தேர் உற்சவம் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கடந்த 01ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மஹோற்சவத்தில் தினமும் தம்ப பூஜை,வசந்த மண்டபபூஜை,சுவாமி உள்வீதியுலா,வெளிவீதியுலா என்பன நடைபெற்று வருகின்றது.

இன்று காலை விசேட பூஜைகள் நடைபெற்று ஆறுமுகக்கடவுள் தேர் அருகில் கொண்டுவரப்பட்டு விசேட பூஜைகள் நடைபெற்ற தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இன்றைய தேரோட்டத்தில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டதுடன் தேர் இழுத்து தமது நேர்கடன்களை செலுத்திக்கொண்டனர்.

நாளை வியாழக்கிழமை காலை முருகப்பெருமானின் தீர்த்தோற்சவம் சமுத்திரத்தில் நடைபெறவுள்ளது.

கதிர்காம கந்தனை சென்று தரிசிக்கமுடியாதவர்கள் இந்த ஆலயத்திற்கு வருகைதந்து தமது நேர்கடன்களை செலுத்துவது சிறப்பம்சமாகும்.