மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கான ஆறுமாத கால ஆய்வு அறிக்கை தொடர்பான கள அறிக்கை பரிசோதனைகள் இன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கான ஆறுமாத கால ஆய்வு அறிக்கை பரிசோதனையின் போது பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்கான அலுவலகங்கள், பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுதிகள், பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய வளாக சுற்று சூழல் போன்ற கள ஆய்வு அறிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆறுமாத கால ஆய்வை தொடர்ந்து பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய வளாகத்தில் மரக்கன்றுகள் நாட்டப்பட்டதுடன், பொலிஸ் அத்தியட்சகர் காரியால வளாகத்தில் மாவட்ட போக்குவரத்து பிரிவுக்கான பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டது.