மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு தேவைப்பாடான மருத்துவ உபகரணங்கள் தொடர்பில் விடுக்கப்பட்ட வேண்டு கோளுக்கிணங்க அவுஸ்ரேலியா மருத்துவ உதவி சங்கத்தினால் 4 மில்லியன் ரூபாய் பெறுமதியான வைத்திய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கலாரஞ்சனி கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வைத்தியசாலையின் தேவை கருதி குறித்த நிறுவனம் பல வருடங்களாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு செய்து உதவிகளுக்கு நன்றி தெரிவிப்பதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சை நிபுணர்.வைத்தியர் பி .ஜீபரா தெரிவித்துள்ளார்.