கொரோனா சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பொதுமக்களால் இதுவரை சுமார் 2 கோடிக்கும் அதிக பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை இன்றைய தினம் மட்டக்களப்பு முனைப்பு ஸ்ரீலங்கா அமைப்பினால் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்காக ஒரு மில்லியன் பெறுமதியான மருத்துவ உபகரணங்களும் ,மட்டக்களப்பு சர்மத அமைப்பினரால் 6.5 மில்லியன் பெறமதியான வைத்திய உபகரணங்களும், எஸ்கோ அமைப்பின் ஊழியர்களின் பங்களிப்பில் 3 இலட்சத்தி 51 ஆயிரம் பெறுமதியான மருத்துவ உபகரணங்களும் வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.