மட்டு.போரதீவுப்பற்று விவேகானந்தபுரம்
பொதுநூலகம் திறந்துவைப்பு

0
192

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட விவேகானந்நபுரத்தில் பொதுநூலகம் ஒன்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரமினால் திறந்துவைக்கப்பட்டது.

விவேகானந்தபுரத்தில் உள்ள மாணவர்களின் நன்மை கருதி அமைக்கப்பட்டுள்ள பொதுநூலகம் இன்று திறந்துவைக்கப்பட்டது.

போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் யோ.ரஜனி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக போரதீவுப்பற்று கோட்டக்கல்விப்பனிப்பாளர் அருள்ராஜ் மற்றும் பிரதேசசபை செயலாளர் பா.சதிஸ்கரன்,சனசமுக உத்தியோகஸ்தர் க.ரவிச்சந்திரன் ,உள்ளுராச்சி உதவியாளர் கி.குருசாந்தன் ஆலய பிரதம குரு ஆசிரியர்கள் மாணவர்கள் சனசமுக சங்கத்தினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்