உலக சூழல் தினம் – 2022 இனை முன்னிட்டு ‘பூலோகம் ஒரே ஒரு குடிமனை’என்கின்ற தொனிப்பொருளில் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றாடல் தின நிகழ்வுகள் பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் தலைமை மற்றும் வழிகாட்டுதலில் மிக இடம்பெற்றது.
மக்களிடையே உணவுப்பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுகளை மேற்கொள்வதற்காக பிரதேச செயலக பிரிவின் 45 கிராம சேவகர் பிரிவுகளிலும் 225 விழிப்புணர்வு வீட்டுத் தோட்டங்களானது கிராம அலுவலர் அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் மக்களின் பங்களிப்புடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
எதிர்கால சந்ததியினரை ஊக்குவிக்கும் முகமாக மகிழூர் டுழுர் பாலர் பாடசாலை மாணவர்களால் வீட்டுத் தோட்டம் அமைக்கும் ஆரம்ப மற்றும் பிரதான நிகழ்வானது டுழுர் கட்டிட வளாகத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
அடுத்த நிகழ்வாக பிரதேச செயலக பசுமைக் கழக உறுப்பினர்களால் வருடாந்தம் வெளியிடப்படும் சுற்றாடல் செய்திமடல்- 2022 வெளியீட்டு நிகழ்வு மற்றும் உணவுப் பாதுகாப்பு, சிக்கனம் தொடர்பில் ‘உற்பத்தி செய்வோம் உலகை வெல்வோம்’துண்டுபிரசுர விநியோக நிகழ்வு பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. அத்தோடு பிரதேச செயலக வளாகத்தில் உத்தியோகத்தர்களினால் பயிர்ச்செய்கை மேம்பாட்டுத் திட்டமானது ஆரம்பித்துவைக்கப்பட்டது
இவ் நிகழ்வுகளில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், பசுமைக் கழக உறுப்பினர்கள் , அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.